/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'லைப் ஜாக்கெட்' இல்லாமல் பரிசல் இயக்கியவர் கைது
/
'லைப் ஜாக்கெட்' இல்லாமல் பரிசல் இயக்கியவர் கைது
ADDED : ஜூன் 19, 2025 01:32 AM
ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரியாற்றில் லைப் ஜாக்கெட் இல்லாமல், சுற்றுலா பயணிகளை படகில் அழைத்து சென்ற, பரிசல் ஓட்டியை, ஒகேனக்கல் போலீசார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த, 15ல் அடையாளம் தெரியாத பரிசல் ஓட்டி, ஒகேனக்கல் காவிரியாற்றில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், பரிசல் இயக்குவதாக புகார் எழுந்தது.
அதன்படி வழக்குப்பதிவு செய்த ஒகேனக்கல் போலீசார், நேற்று ஒகேனக்கல் அடுத்த ஊட்டமலையை சேர்ந்த முருகேசன், 57, என்பவரை கைது செய்தனர்.
இந்நிலையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது;
இனி வரும் காலங்களில் ஒகேனக்கல் சுற்றுலாதலத்தில் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், பாதுகாப்பு உடை அணியாமலும் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் நபர்கள் மீது, போலீசார் மூலம் வழக்குப்பதிந்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.