/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்வாரிய அலுவலருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
/
மின்வாரிய அலுவலருக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : ஜூன் 13, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த மோட்டரை சேர்ந்தவர் ரவி, 45, டிரைவர். இவர், தன் வீட்டின் முன் செல்லும் உயர் மின்னழுத்த மின்கம்பிகளுக்கு கீழ், ஷெட் அமைக்க முயன்றுள்ளார்.
கடந்த, 9ல், அங்கு சென்ற காவேரிப்பட்டணம் மின்வாரிய உதவி பொறியாளர் கார்த்திகேயன், 39, அப்பகுதிக்கு சென்று ஷெட் அமைக்கும் பணியை தடுத்து, அதை அகற்ற கூறியுள்ளார். அப்போது ரவி, ஷெட்டை அகற்ற முடியாது எனக்கூறி கார்த்திகேயனுக்கு மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அவர் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார், ரவியை கைது செய்தனர்.