/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கத்தியை காட்டி ஆசிரியரிடம் வழிப்பறி செய்தவர் கைது
/
கத்தியை காட்டி ஆசிரியரிடம் வழிப்பறி செய்தவர் கைது
ADDED : ஜன 20, 2025 06:51 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே தேவன்தொட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 32. குந்துக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார்.
கடந்த, 17 இரவு, 10:30 மணிக்கு, ஓசூர் சப்கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஓம் சக்தி கோவில் அருகே தேன்கனிக்கோட்டை சாலையில் நடந்து சென்றார். அங்கு வந்த நபர், கத்தியை காட்டி மிரட்டி, ஆசிரியர் சுரேஷ் பாக்கெட்டில் இருந்த, 5,000 ரூபாயை பறித்து சென்றார். சுரேஷ் புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரித்தனர். இதில், ஓசூர் ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த தன்வீர் நவாஸ், 34, என்பவர் பணத்தை பறித்து சென்றது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான தன்வீர் நவாஸ் மீது, ஒரு திருட்டு மற்றும் கொலை மிரட்டல் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.