/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பல்சர் பைக் திருட முயன்றவர் கைது
/
பல்சர் பைக் திருட முயன்றவர் கைது
ADDED : அக் 26, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: பர்கூர் அங்கிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் பிரவீன்குமார், 31. இவர் தனியார் நிறுவனத்தில் ஸ்டோர் கீப்பராக வேலை செய்து வருகிறார். கடந்த, 24ல், இவரது பல்சர் பைக்கை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். அதை மர்ம நபர் திருட முயன்றார்.
இதை கவனித்த பிரவீன்குமார் அவரை பிடித்து பர்கூர் போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், வேலுார் மாவட்டம் ஒடகத்துாரை சேர்ந்த வேணுகோபால், 19, என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.