/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.5 கோடி மோசடி செய்தவர் தற்கொலைக்கு முயற்சி
/
ரூ.5 கோடி மோசடி செய்தவர் தற்கொலைக்கு முயற்சி
ADDED : நவ 25, 2025 11:49 PM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், காளேகுண்டாவை சேர்ந்தவர் பாரூக், 35. கடந்த, 10 ஆண்டுகளாக சீட்டு நடத்தி வந்துள்ளார்.
கடந்த மாதம் பாரூக் தலைமறைவாகி விட்டதாகவும், 5 கோடி ரூபாய் வரை மோசடி செய்து விட்டதாகவும் கூறி, கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்திருந்தனர்.
நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த பாரூக், நேற்று காலை விஷம் குடித்ததாக, குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அவரை, ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவலறிந்து, 100க்கும் மேற்பட்டோர், பணம் கேட்டு மருத்துவமனையில் திரண்டனர். இதனால் பாரூக், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மக்கள் கூறுகையில், 'ஒவ்வொருவருக்கும் பாரூக் லட்சக்கணக்கில், பணம் தர வேண்டும்' என்றனர்.

