/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின்வேலியை கடக்க முயன்ற யானை விநாயகர் பாடல் பாடி வழிபட்ட நபர்
/
மின்வேலியை கடக்க முயன்ற யானை விநாயகர் பாடல் பாடி வழிபட்ட நபர்
மின்வேலியை கடக்க முயன்ற யானை விநாயகர் பாடல் பாடி வழிபட்ட நபர்
மின்வேலியை கடக்க முயன்ற யானை விநாயகர் பாடல் பாடி வழிபட்ட நபர்
ADDED : நவ 30, 2024 02:07 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, சோலார் மின் வேலியை கடக்க முயன்ற ஒற்றை யானையை நோக்கி, விநாயகர், ஐயப்பன் பாடலை பாடி ஒருவர் வழிபட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில், 250க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இவற்றில், 125க்கும் மேற்பட்ட யானைகள், கர்நாடகா மாநிலத்தில் இருந்து இடம் பெயர்ந்தவையாகும். யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்-ளதால், அவை ஆக்ரோஷமாக காணப்படுகின்றன. அதுமட்டு-மின்றி, தனியாகவும் ஒற்றை யானைகள் சுற்றித்திரிகின்றன. இந்நி-லையில், தேன்கனிக்கோட்டை அடுத்த ஏணிமுச்சந்திரம் கிராம பகுதியில், நேற்று ஒற்றை ஆண் யானை சுற்றித்திரிந்தது.யானைகள் வெளியேறாமல் இருக்க, வனப்பகுதி ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த தொங்கும் வகையிலான சோலார் மின் வேலியை கடந்து, கிராமத்திற்குள் வர யானை முயற்சி செய்த வண்ணம் இருந்தது. அப்போது யானைக்கு எதிரே மற்றொரு புறத்தில் இருந்த நபர் ஒருவர், விநாயகர், ஐயப்பன் பாடல்களை பாடி வழிபட்டார். நீண்ட நேரமாக அங்கும், இங்கும் சென்றும் யானையால் சோலார் வேலியை கடந்து வர முடியவில்லை. வேறு வழியின்றி யானை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது.

