/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மருதேரி பட்டாளம்மன் கும்பாபிஷேக விழா
/
மருதேரி பட்டாளம்மன் கும்பாபிஷேக விழா
ADDED : செப் 05, 2025 01:22 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மருதேரி கிராமத்தில் உள்ள பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று நடந்தது. காலையில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ராஜ்யசபா, அ.தி.மு.க., -
எம்.பி., தம்பிதுரை கலந்து கொண்டார். போச்சம்பள்ளி தாசில்தார் சத்யாவின் மேற்பார்வையில், பர்கூர் டி.எஸ்.பி., முத்து
கிருஷ்ணன் தலைமையில், 70 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
* சூளகிரி அடுத்த பெரியமோத்துகானப்பள்ளி கிராமத்தில், பழமையான கங்கம்மா மாரியம்மன் கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது.