/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மருது பாண்டியர் 223வது குருபூஜை
/
மருது பாண்டியர் 223வது குருபூஜை
ADDED : அக் 28, 2024 04:04 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அகமுடையார் நலச்சங்கம் சார்பில், முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள், மாமன்னர் மருது பாண்டியர்களின், 223வது குருபூஜை விழா, ஊத்தங்கரை ரவுண்டானாவில் நேற்று நடந்தது.
முன்னதாக நாட்டாண்மை கொட்டாய், வண்டிக்காரன் கொட்டாய், தாண்டியப்பனுார், அப்பிநாயக்கன்பட்டி, கொண்டம்-பட்டி ஆகிய கிராமங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க, மருது-பாண்டியர்கள் வேடமிட்டு, வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே இருந்து, ஊத்தங்கரை ரவுண்டானா வரை ஊர்வலமாக சென்று மாமன்னர் மருதுபாண்டியர்களின், உருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தி, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை அகமுடையார் நலச்சங்க தலைவர் நல்-லாசிரியர் தர்மலிங்கம் தலைமை வகித்து கொடியேற்றி மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மாநில, மாவட்ட நிர்-வாகிகள் பலர் கலந்து கொண்டு, மருது பாண்டியர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்-சியில், அகமுடையார் நலச்சங்க இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து
கொண்டனர்.

