/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இ.பி.எஸ்., பிறந்தநாளையொட்டி மருத்துவ பரிசோதனை முகாம்
/
இ.பி.எஸ்., பிறந்தநாளையொட்டி மருத்துவ பரிசோதனை முகாம்
இ.பி.எஸ்., பிறந்தநாளையொட்டி மருத்துவ பரிசோதனை முகாம்
இ.பி.எஸ்., பிறந்தநாளையொட்டி மருத்துவ பரிசோதனை முகாம்
ADDED : ஜூலை 07, 2025 03:40 AM
கிருஷ்ணகிரி: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்.,ன், 71வது பிறந்த நாளையொட்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரி கிராமத்தில் நேற்று பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தார். முகாமில், பொது மருத்துவம், கண் பரிசோதனை, ரத்த தானம் நடந்தது.
நிகழ்ச்சியில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முனிவெங்கட்டப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், சைலேஷ் கிருஷ்ணன், சூர்யா, கேசவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை வடக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் அப்பாதுரை, ராஜகோபால் செய்தி-ருந்தனர்.