/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கார் மோதி மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி
/
கார் மோதி மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி
ADDED : டிச 27, 2025 05:42 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி, மனநலம் பாதித்தப்பட்டவர் பலி-யானார். 4 பேர் காயமடைந்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி பெரிய-பேட்டையை சேர்ந்தவர் வாசிப், 43. இவர் தன் மனைவி நாதியா, 37, மகன்கள் முஷாப், 11, ஜியாத், 3, ஆகியோருடன் ஐ.20 காரில் நேற்று பெங்களூரு நோக்கி சென்றுள்ளனர். மாலை, 4:30 மணியளவில் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி அருகே, சென்னை கிருஷ்ணகிரி சாலையில் வந்தபோது, நடுவில் திடீரென ஒருவர் ஓடியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், அவர் மீது மோதியதில் இறந்தார். காரில் சென்ற, நால்வரும் லேசான காயங்க-ளுடன் உயிர் தப்பினர்.கிருஷ்ணகிரி டவுன் போலீசார் இறந்தவர் சட-லத்தை மீட்டு விசாரித்தனர். இதில், இறந்தவர் கிருஷ்ணகிரி அடுத்த கே.பூசாரிப்பட்டி அருகே கெட்டுகொல்லையை சேர்ந்த கிருஷ்ணசாமி, 45, என்பது தெரிந்தது. இவர் சற்று மனநிலை சரியில்-லாதவர் என்றும், அப்பகுதியில் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்தி வந்துள்ளார் என்பதும் தெரிந்தது. திடீரென சாலை குறுக்கே ஓடியதால் விபத்து ஏற்-பட்டதும் தெரிந்தது. கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

