/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி நகராட்சியுடன் 2 பஞ்சாயத்துகள் இணைப்பு
/
கிருஷ்ணகிரி நகராட்சியுடன் 2 பஞ்சாயத்துகள் இணைப்பு
ADDED : செப் 30, 2024 06:42 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரின் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், நேற்று கிருஷ்ணகிரி நகராட்சியுடன், 2 பஞ்சாயத்துகளை இணைக்க, தமிழக அரசு அறித்துள்ளது. அதன்படி, 33 வார்டுகளை கொண்ட கிருஷ்ணகிரி நகராட்சியுடன் பையனப்பள்ளி பஞ்., (கலெக்டர் அலுவலகம் உள்ள பகுதி) மற்றும் கட்டிகானப்பள்ளி பஞ்., ஆகிய, 2 பஞ்சாயத்துகள் இணைக்கப்படுகின்றன.
இதன் மூலம், 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 71,335 பேர் மக்கள் தொகையாகவும், 11.50 சதுர கி.மீ., ஆகவும் இருந்த கிருஷ்ணகிரி நகராட்சி, தற்போது, 2 பஞ்., இணைக்கப்படுவதால், பஞ்சாயத்திலுள்ள, 24,972 பேருடன் சேர்ந்து, 96,307 பேர் மக்கள் தொகையாகவும், 27.95 சதுர கி.மீ., பரப்பளவாகவும் மாறியுள்ளது. இந்த அறிவிப்பால் பஞ்., பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.