ADDED : அக் 26, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மேகலம்பட்டியை சேர்ந்தவர் மாதையன், 51. கர்நாடகா மாநிலம், பெங்களூரு லக்கசந்திரா பகுதியில் தங்கி, கட்டட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்; பெங்களூருவில் இருந்து, நேற்று முன்தினம் ஊருக்கு புறப்பட்டு சென்ற மாதையன், ஓசூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி, கழிவறை சென்றார்.
அப்போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.