ADDED : நவ 10, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்ப்-பிடிப்பு பகுதியில் மழை தீவிரம் குறைந்ததால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 9,466 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வ-ரத்து, நேற்று, 9,149 கனஅடியாக சரிந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 8,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. வரத்தை விட திறப்பு குறை-வாக இருந்தது. எனினும் நேற்று முன்தினம், 106.60 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 106.59 அடியாக சரிந்தது.