sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு

/

எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு

எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு

எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு


ADDED : டிச 25, 2024 01:55 AM

Google News

ADDED : டிச 25, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, டிச. 25-

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 37 ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில், அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆரின் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். மாவட்ட அவைத்

தலைவர் காத்தவராயன், மாவட்ட இணை செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ் உள்பட பலர்

பங்கேற்றனர்.

* கிருஷ்ணகிரி, மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் தலைமையில், பெத்ததாளாப்பள்ளியிலுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, அசோக்குமார் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிருஷ்ணகிரி நகர, அ.தி.மு.க., சார்பில், ரவுண்டானா அருகில், நகர செயலாளர் கேசவன் தலைமையிலும், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், கிட்டம்பட்டியில், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி தலைமையிலும்

எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

* ஓசூரில், ராயக்கோட்டை சாலை சந்திப்பிலுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, பகுதி செயலாளர் ராஜி தலைமையில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ராயக்கோட்டை சாலையில், எம்.ஜி.ஆர்., படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. ஓசூர் அசோக் பில்லர் பகுதியில், 29வது வார்டு கவுன்சிலர் தில்ஷாத் முஜிபூர் ரஹ்மான் சார்பில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

* மத்துார் ஒன்றிய, அ.தி.மு.க.,. சார்பில், மத்துார் பஸ் ஸ்டாண்டிலுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு ஊத்தங்கரை, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம் மாலை அணிவித்து அவரின் உருவ படத்திற்கு மலர் துாவி மவுன அஞ்சலி செலுத்தினார். போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமையில், போச்சம்பள்ளி, 4 ரோடு சந்திப்பில் எம்.ஜி.ஆர்., உருவ படத்திற்கு முன்னாள், பர்கூர் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்ளிட்‍டோர் மலர் துாவி மவுன அஞ்சலி செலுத்தினர்.

* ஊத்தங்கரையில், அ.தி.மு.க., சார்பில், மா.ஜி., முதல்வர் எம்.ஜி.ஆரின் 37 வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் சாகுல்அமீது, வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, தெற்கு வேங்கன், மத்திய சாமிநாதன், நகர செயலாளர் ஆறுமுகம், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக எம்.ஜி.ஆர்., உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us