/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜி.ஹெச்., நோயாளிகளுக்கு மதிய உணவு திட்டம் துவக்கம்
/
ஜி.ஹெச்., நோயாளிகளுக்கு மதிய உணவு திட்டம் துவக்கம்
ஜி.ஹெச்., நோயாளிகளுக்கு மதிய உணவு திட்டம் துவக்கம்
ஜி.ஹெச்., நோயாளிகளுக்கு மதிய உணவு திட்டம் துவக்கம்
ADDED : ஜன 28, 2025 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்துாரிலுள்ள அரசு மருத்துவமனை உள் நோயாளிகளுக்கு, நேற்று முதல் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
காலை, மாலை நேரங்களில் பால், பிரட் வழங்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முதல், கூடுதலாக மதிய உணவு திட்டத்தில் சாப்பாடு, பொரியல், பருப்பு சாம்பார், தயிர், கேசரி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் மாவட்ட இணை இயக்குனர் பரமசிவம் தொடங்கி வைத்தார். இதில், போச்சம்பள்ளி முன்னாள் பஞ்., தலைவர் சாந்தமூர்த்தி, டாக்டர் நாராயணசாமி மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.