/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர் ஆர்ப்பாட்டம்
/
கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர் ஆர்ப்பாட்டம்
கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர் ஆர்ப்பாட்டம்
கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பால் உற்பத்தியாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 14, 2024 01:37 AM
கிருஷ்ணகிரி, டிச. 14-
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி ஒன்றியம் பெல்லாரம்பள்ளி ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன், பால் உற்பத்தியாளர்கள் மாடுகள் மற்றும் பால் கேனுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு, 10 ரூபாய் உயர்த்தி பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு, 45 ரூபாய், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு, 54 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும். ஆரம்ப சங்க பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, சம்பள உயர்வு வழங்கி இதற்கான தொகை, 50 சதவீதம் ஆவின் ஒன்றியங்களில் வழங்க வேண்டும். தற்போது பாலின் தரத்தை கணக்கிட கொழுப்பு அல்லாத இதர சத்துக்கள், 8.2, கொழுப்பு சத்து, 4.3 உள்ளதை, 8.0 மற்றும், 4.0 என கணக்கிட்டு கொள்முதல் செய்ய வேண்டும்.
கடந்த, 2017 அக்., 25ல் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை நீதிமன்ற அமர்வு தீர்ப்பின்படி, ஆரம்ப சங்கங்களிலிருந்து பாலை வண்டிகளில் ஏற்றுவதற்கு முன்பாக பாலின் அளவையும், தரத்தையும் குறித்துக் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு ஆண்டுக்கு இருமுறை இலவச தடுப்பூசி போட வேண்டும் என்பது உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

