/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுரண்டப்படும் கனிமவளம்; சவுமியா அன்புமணி வேதனை
/
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுரண்டப்படும் கனிமவளம்; சவுமியா அன்புமணி வேதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுரண்டப்படும் கனிமவளம்; சவுமியா அன்புமணி வேதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுரண்டப்படும் கனிமவளம்; சவுமியா அன்புமணி வேதனை
ADDED : டிச 23, 2024 09:45 AM
ஓசூர்: ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கனிமவள கொள்ளை நடக்கிறது,'' என, பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த, பசுமை தாயகம் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, அங்குள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகளுடன், தமிழகத்திற்கு வருகிறது. ஆனால், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மக்கள் பயன்படுத்தும் சோப்பு, சலவை துாள் என, பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை வழங்கியுள்ளது.
ஓசூர் தொழிற்சாலைகள் சுத்திகரிப்பு செய்யாமல், போர்வெல் அமைத்து அதற்குள் கழிவு நீரை விடுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கிறது. ஏரியில் கழிவு நீர் கலக்கிறது. கிருஷ்ணகிரியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ள போதும், கழிவுநீரை ஏரிகளில் கலக்கின்றனர். இப்படி இருந்தால் நல்ல ஆரோக்கியமான தலைமுறையை எப்படி கொண்டு வர முடியும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனிமவளங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சுரண்டப்படுகிறது. இது மிகப்பெரிய காலநிலை மாற்றத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
கடந்த, 2004-2009 வரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது, புளோரைடு ஆய்வு மையத்தை, தர்மபுரியில் உருவாக்க முயற்சித்தார். அதற்குள் பதவிக்காலம் முடிந்ததால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. அதனால்தான் நம் மாவட்டத்தில் அமைச்சர்கள் வர வேண்டும் என நினைக்கிறோம். மற்றவர்களுக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரியை பற்றி என்ன தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

