/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆய்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்து அதிகாரிகளை காக்க வைத்த அமைச்சர்
/
ஆய்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்து அதிகாரிகளை காக்க வைத்த அமைச்சர்
ஆய்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்து அதிகாரிகளை காக்க வைத்த அமைச்சர்
ஆய்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்து அதிகாரிகளை காக்க வைத்த அமைச்சர்
ADDED : நவ 02, 2025 01:28 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் நேற்று நடந்த திட்டப்பணிகள் குறித்த அனைத்துத்துறை
அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில், அதிகாரிகளை காக்க வைத்து, தாமதமாக
அமைச்சர் சக்கரபாணி வந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்
அலுவலகத்தில், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு
திட்டங்கள், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை
அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்
துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான சக்கரபாணி தலைமையில்
நேற்று மதியம், 3:00 மணிக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால்,
நேற்று மாலை, 6:30 மணிக்கே அமைச்சர் சக்கரபாணி வந்தார்.
அதுவரை
அனைத்து துறை அலுவலர்களும் காத்திருந்த நிலையில், தாமதமாக வந்த
அமைச்சர் சக்கரபாணி பெயரளவிற்கு திட்டப்பணிகள் குறித்து பேசி
விட்டு, கூட்டத்தை முடித்தார்.
மாவட்டத்திலுள்ள குறை நிறைகள் குறித்து, அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்காமல், அவசர அவசரமாக
கூட்டத்தை முடித்து சென்றார்.
அமைச்சர்
சக்கரபாணி, எப்போதும் குறித்த நேரத்திற்கு வராமல், அலுவலர்களை
காக்க வைப்பது வாடிக்கை என்றாலும், தி.மு.க.,வில் நிகழும் உட்கட்சி
பிரச்னைகள் குறித்து பேசவே, நேற்று கிருஷ்ணகிரி வந்துள்ளார்.
கிருஷ்ணகிரி
நகராட்சி தலைவர் பரிதா நவாப் மீது, தி.மு.க., கவுன்சிலர்களே
நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, கடந்த, 16ல் மனு அளித்த நிலையில்
வரும், 10ல்,
நகராட்சி கூட்டம் நடக்கவுள்ளது.
தலைமையின்
அறிவுறுத்தல் படி, அதை சரிகட்டவே, அமைச்சர் சக்கரபாணி வந்துள்ளார்.
இது குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் பலர் அளித்த புகார் படியே
இது நடக்கிறது எனவும், ஓரிரு நாளில் அது வெளிப்படையாக தெரியும் எனவும்
மூத்த, தி.மு.க., நிர்வாகிகள் கூறினர்.

