/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டவரில் ஏறிய மாணவன் தற்கொலை மிரட்டல்
/
டவரில் ஏறிய மாணவன் தற்கொலை மிரட்டல்
ADDED : நவ 02, 2025 01:27 AM
கிருஷ்ணகிரி, ந கிருஷ்ணகிரி அடுத்த ஒரப்பத்தை சேர்ந்த, 18 வயது மாணவன், அதே பகுதியிலுள்ள பாலிடெக்னிக் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்துள்ளார். கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை காதலித்துள்ளார்.
இதையறிந்த சிறுமியின் தந்தை, நேற்று முன்தினம் அந்த மாணவனை அழைத்து மிரட்டியுள்ளார். இதில், மனமுடைந்த மாணவன், நேற்று மாலை காட்டிநாயனப்பள்ளி அருகிலுள்ள தற்போது பயன்பாட்டில் இல்லாத, 200 அடி உயர மொபைல் டவர் மீது ஏறி, தற்கொலை செய்து கொள்ள போவதாக, தன் நண்பனுக்கு மொபைலில் தகவல் தெரிவித்துள்ளார்.
அவரது தகவல் படி, கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி, மகாராஜகடை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார், சம்பவ இடம் விரைந்து, மாணவனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கிருஷ்ணகிரி தீயணைப்பு வீரர்கள், டவர் மீதேறி மாணவனிடம் பேசி பத்திரமாக மீட்டு, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம்
பரபரப்பு ஏற்பட்டது.

