/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் அமைச்சர் ஆய்வு
/
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் அமைச்சர் ஆய்வு
ADDED : ஆக 01, 2025 01:20 AM
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி
மாவட்டம், நாகோஜனஹள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட,
கம்புகாலப்பட்டி, நாகரசம்பட்டி உள்ளிட்ட, 6 வார்டுகளுக்கு
நேற்று வேலம்பட்டி, சமுதாயக்கூடத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு
முகாம் நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
அமைச்சர் சக்கரபாணி, பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆய்வு
செய்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய
விசாரணை மேற்கொண்டு, 45 நாட்களுக்குள் தீர்வு காண அறிவுறுத்தினர்.
இதில் போச்சம்பள்ளி தாசில்தார் சத்யா, பேரூராட்சி தலைவர் தம்பிதுரை,
பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
* ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி அரசு
ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த முகாமிற்கு ஊத்தங்கரை தாசில்தார்
மோகன்தாஸ் தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் பாலாஜி, தவமணி ஆகியோர்
முன்னிலை வகித்தனர். முகாமில், கல்லாவி பஞ்.,க்கு உட்பட்ட, 20க்கும்
மேற்பட்ட கிராமத்தை
சேர்ந்த பொதுமக்கள், தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.