/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரிக்கு தமிழக முதல்வர் வருகை நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அமைச்சர் ஆய்வு

ADDED : ஜூலை 31, 2025 01:31 AM
ஓசூர், கிருஷ்ணகிரிக்கு, தமிழக முதல்வர் வருகை தர உள்ள நிலையில், அரசு நிகழ்ச்சி நடக்க உள்ள இடத்தை, அமைச்சர் சக்கரபாணி நேற்று ஆய்வு செய்தார்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும், 16 மற்றும் 17ம் தேதி என இரு நாட்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 16ம் தேதி கிருஷ்ணகிரியிலும், 17ம் தேதி ஓசூரிலும் அரசு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. ஓசூர் நிகழ்ச்சிக்கு, அந்திவாடி விளையாட்டு மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள், இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்குகிறார். மேலும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்க உள்ளார்.
ஓசூர், அந்திவாடி விளையாட்டு மைதானத்தை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.பி., தங்கதுரை, எம்.எல்.ஏ.,க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் மற்றும் அதிகாரிகளுடன் சென்று, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடித்து, ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார். ஆய்வின் போது, முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா உட்பட பலர்
உடனிருந்தனர்.