/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
/
சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 17, 2025 01:39 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம், சிறுபான்மையினருக்கு சுயவேலை வாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்ட, குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம், கல்விக்கடன் திட்டம் ஆகியவை செயல்படுத்தப் படுகிறது.
இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சியர்கள் மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள், விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.
மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள, வரும் ஜூலை 4ல், ஓசூர் தாசில்தார் அலுவலகத்திலும், 8ல் தளி பி.டி.ஓ., அலுவலகத்தில், 11ல் தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம், 18ல் பர்கூர், 22ல் ஊத்தங்கரை, 25ல் கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்திலும், 29ல் வேப்பனஹள்ளி பி.டி.ஓ., அலுவலகத்திலும் லோன் மேளாக்கள் நடத்தப்படுகிறது.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.