/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர்' குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ.,
/
மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர்' குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ.,
மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர்' குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ.,
மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர்' குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ.,
ADDED : அக் 03, 2025 01:33 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 1 முதல், 11 வார்டுகள் வரை, மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சி மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா, முடிவுற்ற பணிகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா முன்னிலை வகித்தனர். ஜூஜூவாடி, ஜூஜூவாடி ஆர்ச், பேடரப்பள்ளி ரேஷன் கடை, காமராஜ் நகர், சின்ன எலசகிரி சர்க்கிள், கே.சிசி., நகர் சர்க்கிள், பாகலுார் சாலை அரசமரம், பஸ்தி, பாரதிநகர் பஸ் ஸ்டாப், வெங்கடேஷ் நகர் சர்க்கிள், வசந்த் நகர் ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகள் நடந்தன.
ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் தலைமை வகித்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து, 'மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர்' நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்கள் கூறிய குறைகளை நிவர்த்தி செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். மேலும், தி.மு.க., அரசின் நான்காண்டு சாதனை புத்தங்களை மக்களுக்கு வழங்கினார்.
தி.மு.க., கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மாதேஸ்வரன், மாநகர அவைத்தலைவர் செந்தில், மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர்கள் மாரக்கா சென்னீரன் உட்பட பலர் பங்கேற்றனர்.