/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர்' ஓசூரில் குறைகள் கேட்ட எம்.எல்.ஏ.,

ADDED : நவ 16, 2025 02:47 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 24 முதல், 33வது வார்டு வரை, 'மக்களை தேடி சட்டமன்ற உறுப்-பினர்' என்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஓசூர் மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா முன்னிலை வகித்தனர்.
ஓசூர் ராம்நகர், காந்தி சிலை, ராகவேந்திரா கோவில், நரசம்மா காலனி, சீத்தாராம் மேடு, சூடசந்திரம், தேர்ப்பேட்டை, காமராஜ் காலனி மாநகராட்சி விளையாட்டு மைதானம், ஏரித்தெரு, சாந்தி நகர் ஆகிய பகுதிகளில், ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.சாக்கடை கால்வாய், சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் வசதி போன்றவற்றை செய்து கொடுக்குமாறு, மக்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கினர். அவற்றை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். தி.மு.க., ஆட்சியின் நான்காண்டு சாதனை புத்தகத்தை, பொது-மக்களுக்கு வழங்கினார்.
ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட பொருளாளர் சுகுமார், மாநகர அவைத்தலைவர் செந்தில், துணைச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், பகுதி செய-லாளர் ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.