/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மொபைல்போன் டவரில் காப்பர் ஒயர் திருடியவர் கைது
/
மொபைல்போன் டவரில் காப்பர் ஒயர் திருடியவர் கைது
ADDED : நவ 16, 2025 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேன்கனிக்கோட்டை: திருப்பத்துார் மாவட் டம், வாணியம்பாடி அருகே மேல்பள்ளி-பட்டு மேட்டுதெருவை சேர்ந்தவர் திருமலை, 21. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்,
தேன்கனிக்கோட்டை பகுதியிலுள்ள ஜியோ மொபைல்போன் டவர்களை மேற்பார்வை செய்து வருகிறார். தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் பகுதியிலுள்ள ஜியோ டவரில் இருந்த, 6,000 ரூபாய் மதிப்புள்ள, 40 மீட்டர் காப்பர் ஒயர் கடந்த, 28ம் தேதி திருட்டு போனது.அவர் புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார், தேன்கனிக்-கோட்டை மேல்கோட்டையை சேர்ந்த பெயின்டர் முகம்மது சித்திக், 25, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து காப்பர் ஒயரை பறிமுதல் செய்தனர்.

