/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வெள்ள வடிகால் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
/
வெள்ள வடிகால் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
வெள்ள வடிகால் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
வெள்ள வடிகால் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
ADDED : டிச 01, 2024 01:14 AM
வெள்ள வடிகால் பகுதி ஆக்கிரமிப்புகளை
அகற்ற கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி, டிச. 1-
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 'பெஞ்சல்' புயல் முன்னேற்பாடு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சரயு முன்னிலை வகித்தார்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சுற்றுலாத்துறை இயக்குனருமான ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்து பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பருவமழை காலத்தில் அதிகளவு வெள்ள அபாயம் ஏற்படும் பகுதி களை தணிக்கை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தாழ்வான பகுதிகளிலுள்ள மக்களை நிவாரண முகாமில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி, குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வெள்ள வடிகால் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். வெள்ளம் ஏற்படும் பகுதிகளில், தொற்று நோய்கள் ஏற்படாதவாறு, குடிநீரில் குளோரிநேசன் மேற்கொள்வது, கொசு மருந்தை, புகைப்பான்கள் மூலம் தெளிப்பது, காய்ச்சல் அதிகம் காணப்பட்டால் அந்த இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு குடிநீரை காய்ச்சி பருக அறிவுறுத்துவதோடு, அனைத்து நீர்நிலைகளிலும், உபரி நீர் போக்கி, மண் கரைகள் பாதிப்பு ஏற்படாத வண்ணம் சரிவர பராமரிக்க வேண் டும். இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.