/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
150க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
/
150க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஆக 04, 2025 08:39 AM
கிருஷ்ணகிரி: அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக் பால்ராஜ் தலைமையில், கிருஷ்ணகிரியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், காவேரிப்பட்டணத்தில், அ.தி.மு.க., துணை பொதுச் செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., முன்னிலையில், அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்ளுக்கு, முனுசாமி எம்.எல்.ஏ., கட்சி துண்டுகளை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட மாணவரணி செயலாளர் ராகுல், உட்பட பலர் பங்கேற்றனர்.
* ஓசூர் கிழக்கு பகுதி, அ.தி.மு.க., மற்றும் மாவட்ட மாணவரணி சார்பில், மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் இணையும் விழா, காரப்பள்ளியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி ஆகியோர் முன்னிலையில், தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியில் இருந்து விலகிய, 100க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர். ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீசன், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, மாவட்ட மாணவரணி தலைவர் ஆதி செய்திருந்தார்.