/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முருங்கை விலை உயர்வு கிலோ ரூ.200க்கு விற்பனை
/
முருங்கை விலை உயர்வு கிலோ ரூ.200க்கு விற்பனை
ADDED : நவ 23, 2025 01:18 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில், கார்த்திகை மாதம் தொடங்கியவுடன் காய்கறிகள் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. தக்காளி, முள்ளங்கி உட்பட பெரும்பாலான காய்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், முருங்கைக்காய் விலை, 4 மடங்காக உயர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில், கம்மம்பட்டி, பாலக்கோடு உட்பட பல்வேறு இடங்களில் இருந்து, தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளுக்கு முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த மாதம் வரை ஒரு கிலோ முருங்கைக்காய் (7 முதல் 10 வரை காய்கள் கொண்ட ஒரு கட்டு) 50 ரூபாய் என விற்ற நிலையில், நேற்று முன்தினம், 150, நேற்று, 200 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இதில், ஒரு காய், 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதத்தில் பெய்த தொடர் மழையால், முருங்கை பூக்கள் உதிர்ந்து விளைச்சல் பாதித்தது. இதனால், வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

