/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பஸ்சில் பெண்ணிடம் நகை திருட முயற்சித்த தாய், மகள் கைது
/
பஸ்சில் பெண்ணிடம் நகை திருட முயற்சித்த தாய், மகள் கைது
பஸ்சில் பெண்ணிடம் நகை திருட முயற்சித்த தாய், மகள் கைது
பஸ்சில் பெண்ணிடம் நகை திருட முயற்சித்த தாய், மகள் கைது
ADDED : செப் 04, 2025 01:21 AM
ஓசூர், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நாகாவதி அணை பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன், 50. விவசாயி; இவரது மனைவி சிவகாமி, 45. பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, தர்மபுரியில் இருந்து அரசு பஸ்சில் இருவரும் நேற்று சென்றனர்.
ராயக்கோட்டையில் பெண்கள் இருவர் பஸ்சில் ஏறினர். ராயக்கோட்டை - உத்தனப்பள்ளி இடையே பஸ் வந்த போது, சிவகாமி கைப்பையில் இருந்த நகை பெட்டியில் இருந்த, 5 பவுன் நகையை, இரு பெண்களும் திருட முயன்றனர். இதை கவனித்த சிவகாமி, தன் கணவர் மணிவண்ணன் மற்றும் டிரைவர், கண்டக்டர் உதவியுடன், இரு பெண்களையும் பிடித்து, ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில், சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே வலசையூரை சேர்ந்த சுப்பிரமணி மனைவி தேவி, 45, மற்றும் ரவி மனைவி அஞ்சலி, 20, என்பதும், இருவரும் தாய், மகள் என்பதும் தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த, ஓசூர் டவுன் போலீசார், சம்பவம் நடந்த இடம், ராயக்கோட்டை எல்லைக்குள் வருவதால், அப்பகுதி போலீசில் ஒப்படைத்தனர்.