/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தறிகெட்டு ஓடிய கார் மோதி தாய், மகன் பலி; சாலை மறியல்
/
தறிகெட்டு ஓடிய கார் மோதி தாய், மகன் பலி; சாலை மறியல்
தறிகெட்டு ஓடிய கார் மோதி தாய், மகன் பலி; சாலை மறியல்
தறிகெட்டு ஓடிய கார் மோதி தாய், மகன் பலி; சாலை மறியல்
ADDED : டிச 08, 2024 03:57 AM
கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, தறிகெட்டு ஓடிய கார் மோதியதில், தாய், மகன் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த நாடார்கொட்டாயை சேர்ந்தவர் குமார்த்தி, 55. இவர் தன் வீட்டின் முன் கிருஷ்ணகிரி - திருப்பத்துார் சாலையோரம் பூக்கடை நடத்தி வந்தார். நேற்று மதியம், 2:30 மணியளவில், கடையில் இருந்த போது, அவரது மகனான லாரி டிரைவர் திருப்பதி, 35, கடையின் முன், தன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு, குமார்த்தியுடன் பேசிக்கொண்டி-ருந்தார். அப்போது திருப்பத்துாரில் இருந்து, கிருஷ்ணகிரி நோக்கி வந்த ரெனால்ட் க்விட் கார், முன்னாள் சென்ற மற்-றொரு காரை முந்தி செல்ல முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய கார், பூக்கடையில் இருந்த குமார்த்தி மற்றும் ஸ்கூட்டரில் அமர்ந்திருந்த திருப்பதி மீது மோதியது. இதில், தாயும், மகனும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காரில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர். பர்கூர் போலீசார் சடலங்களை மீட்டு
விசாரித்தனர்.
அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தியும் செய்ய-வில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்-டனர். மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, பர்கூர் டி.எஸ்.பி., முத்துகி-ருஷ்ணன் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக வேகத்தடை அமைக்கப்படும் என கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.