ADDED : செப் 01, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் அருகே, சத்தியமங்கலம் கேட் பகுதியை சேர்ந்த சீனிவாசன் மனைவி ராஜம்மா, 52; இவரது மகன் உதய், 28; கடந்த ஜன., 15ல் கொலை செய்யப்பட்டார்.
இதனால் மனமுடைந்து காணப்-பட்ட ராஜம்மா கடந்த, 25 மாலை, 4:00 மணிக்கு விஷம் குடித்தார். அவரை மீட்டு, ஓசூர் தனியார் மருத்துவமனையிலும் பின், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை-யிலும் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரி-ழந்தார். பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.