/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிணற்றில் விழுந்த குட்டியை மீட்க தாய் யானை பாச போராட்டம்
/
கிணற்றில் விழுந்த குட்டியை மீட்க தாய் யானை பாச போராட்டம்
கிணற்றில் விழுந்த குட்டியை மீட்க தாய் யானை பாச போராட்டம்
கிணற்றில் விழுந்த குட்டியை மீட்க தாய் யானை பாச போராட்டம்
ADDED : ஏப் 10, 2025 01:11 AM
கிணற்றில் விழுந்த குட்டியை மீட்க தாய் யானை பாச போராட்டம்
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே, விவசாய கிணற்றில் ஆண் யானை மற்றும் ஒரு குட்டி யானை தவறி விழுந்த நிலையில், அதை மீட்க தாய் யானை, பாச போராட்டம் நடத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகம், நொகனுார் காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த, 27 க்கும் மேற்பட்ட யானைகள் இரவில், அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தன. அவற்றை, கர்நாடகா வனத்திற்குள் விரட்ட, தமிழக எல்லையான ஜவளகிரி வனப்பகுதி நோக்கி, நேற்று முன்தினம் இரவு வனத்துறையினர் விரட்டி சென்றனர். அகலக்கோட்டை அருகே, குண்டாலம் கிராமத்திலுள்ள விவசாய நிலம் வழியாக நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு யானைகள் சென்றபோது, அங்கிருந்த, 20 அடி ஆழ கிணற்றில், 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மற்றும் ஒரு வயதுடைய குட்டி யானை தவறி விழுந்தன. கிணற்றில் தண்ணீர் இருந்ததால், நீரில் தத்தளித்தன. ஜவளகிரி வனச்சரகர் அறிவழகன் மற்றும் வனத்துறையினர், பொக்லைன் மூலம், கிணற்றின் ஒரு புறத்தை தோண்டி அதன் வழியாக யானைகளை வெளியேற்ற முயன்றனர். ஆனால், தாய் யானை மற்றும் கூட்டத்தில் இருந்த மற்ற யானைகள் கிணற்றின் அருகே நின்று பிளிரிய படி இருந்தன. அதனால் வனத்துறையினரால் கிணற்றின் அருகே உடனடியாக செல்ல முடியவில்லை. தாய் யானை உட்பட மற்ற யானைகளை பட்டாசு வெடித்து, வேறு பகுதிக்கு விரட்டி விட்டு, பொக்லைன் உதவியுடன் கிணற்றின் ஒரு கரையில், சாய்வு தளத்தை ஏற்படுத்தினர். அதன் வழியாக அதிகாலை, 4:00 மணிக்கு, முதலில் ஆண் யானை மேலே வந்தது. குட்டி யானை மேலே வர முயற்சித்தபோது, அதன் தாய் யானை வந்து, அதை பத்திரமாக மீட்டு, ஜவளகிரி வனத்திற்குள் அழைத்து சென்றது. தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தை, 'தெர்மல் டிரோன்' மூலமாக வனத்
துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

