ADDED : டிச 01, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழந்தையுடன் தாய் மாயம்
ஓசூர், டிச. 1-
தேன்கனிக்கோட்டை அடுத்த கூச்சுவாடியை சேர்ந்தவர் ராஜா, 30, கூலித்தொழிலாளி; இவரது மனைவி முத்துலட்சுமி, 26. இவர்களுக்கு, 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த, 27 காலை, 11:00 மணிக்கு, தேன்கனிக்கோட்டை இந்தியன் வங்கிக்கு புதிய வங்கி கணக்கு துவங்க, முத்துலட்சுமி தன் குழந்தையுடன் சென்றார். அங்கிருந்து குழந்தையுடன் வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது கணவர் தேன்கனிக்கோட்டை போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியை சேர்ந்த தேவராஜ் மீது, சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாயமான முத்துலட்சுமி மற்றும் அவரது குழந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.