/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாலையில் தேங்கிய கழிவு நீர் ஓசூரில் வாகன ஓட்டிகள் அவதி
/
சாலையில் தேங்கிய கழிவு நீர் ஓசூரில் வாகன ஓட்டிகள் அவதி
சாலையில் தேங்கிய கழிவு நீர் ஓசூரில் வாகன ஓட்டிகள் அவதி
சாலையில் தேங்கிய கழிவு நீர் ஓசூரில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : அக் 08, 2025 01:24 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா அலுவலக சாலையில் உள்ள பெரிய ஆஞ்சநேயர் சிலை அருகே, சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. நகரின் முக்கிய சாலையான இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
பூஜை பொருட்கள், பூக்கள், பழங்கள், எலக்ட்ரிக் சாதனங்கள் உட்பட பல்வேறு பொருட்கள் வாங்க, இப்பகுதிக்கு தான் மக்கள் வருகின்றனர். இந்நிலையில், கழிவுநீர் சாலையில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுவதுடன், வாகனங்கள் செல்லும் போது, பாதசாரிகள் மீது கழிவுநீர் தெரித்து விழுகிறது.
கனமழை பெய்யும் போது இப்பகுதியில் மழைநீர் வடிய வழியில்லாமல், சாலையில் தேங்கி வருவதால், மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது கழிவுநீரும் சாலையில் தேங்குவது, வாகன ஓட்டிகளை அதிருப்தியடைய செய்துள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.