ADDED : அக் 08, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, பர்கூர் ஒன்றியம், போச்சம்பள்ளியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், பர்கூர், தி.மு.க., -- எம்.எல்.ஏ., மதியழகன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, சரவணன், கவுதம் உள்ளிட்ட, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் ஊத்தங்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட, திருவனப்பட்டி, பெரியகொட்டகுளம் பஞ்.,களுக்கு திருவனப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடந்தது. இதில் பர்கூர், தி.மு.க.,-- - எம்.எல்.ஏ., மதியழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினிசெல்வம், 500க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினர் உட்பட, 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.