ADDED : ஜூலை 03, 2025 01:09 AM
அ நிறம் | அளவு
அரூர், அரூர் கச்சேரிமேட்டில் இருந்து, முருகர் கோவில் தெருவிற்கு செல்லும் சாலை கடந்த, 9 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. அப்போது, சாலை நடுவில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு, மேலே கான்கிரீட் போடப்பட்டது. பணிகள் அவசர கதியில், பெயரளவிற்கு நடந்ததால், சாலைகள் சேதமடைந்து மேடு,
பள்ளமாக உள்ளதுடன், இரும்பு கம்பிகள் மேலே துாக்கியுள்ளன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க, பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
