ADDED : டிச 03, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, டிச. 2-
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கெலமங்கலம் ஒன்றியம் கொப்பக்கரை பஞ்., தொட்டிநாயக்கனப்ஹள்ளி கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்நோக்கு கட்டடம் கட்டுவதற்கான பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, தொட்டி நாயக்கனஹள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளி கட்டடம் சேதம் அடைந்துள்ளதாக, பெற்றோர் கூறியதையடுத்து, புதிய பள்ளி கட்டடம் கட்டித் தருவதாக எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.