ADDED : ஆக 15, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பர்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சாலிநாயனப்பள்ளி முனீஸ்வரன் சுவாமி கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. மேளதாளம், பம்பை முழங்க பெண்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலமாக வந்து முனீஸ்வர சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து அபிஷேக ஆராதனை, பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முனீஸ்வர சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.