/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் 11 கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் 'சீல்'
/
ஓசூரில் 11 கடைகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் 'சீல்'
ADDED : ஆக 29, 2024 10:36 AM
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் இயங்கும் கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு போதிய கால அவகாசம் கொடுத்தும், 3,000 கடைகள் மட்டுமே, மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெற்றுள்ளன. ஆனால், 7,000 நிறுவனங்களுக்கு மேல், தொழில் உரிமம் பெறாமல் உள்ளன.
அதனால், உரிமம் பெறாத கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு, 'சீல்'வைக்கும் பணியை, மாநகராட்சி நிர்வாகம் நேற்று முன்தினம் முதல் மீண்டும் மேற்கொண்டு வருகிறது. நேற்று முன்தினம், 5 கடைகள், ஓட்டல்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக நேற்று, ஓசூர் எம்.ஜி., ரோட்டில் தொழில் உரிமம் பெறாமல் இயங்கிய ஓட்டல்கள், துணிக்கடைகள் என மொத்தம், 11 கடைகளுக்கு, மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையிலான ஊழியர்கள், 'சீல்' வைத்தனர்.

