sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

துாய்மை சேவை விழிப்புணர்வு பேரணியில் மாநகர கமிஷனரை பொதுமக்கள் முற்றுகை

/

துாய்மை சேவை விழிப்புணர்வு பேரணியில் மாநகர கமிஷனரை பொதுமக்கள் முற்றுகை

துாய்மை சேவை விழிப்புணர்வு பேரணியில் மாநகர கமிஷனரை பொதுமக்கள் முற்றுகை

துாய்மை சேவை விழிப்புணர்வு பேரணியில் மாநகர கமிஷனரை பொதுமக்கள் முற்றுகை


ADDED : செப் 20, 2024 02:19 AM

Google News

ADDED : செப் 20, 2024 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில், துாய்மை சேவை குறித்த விழிப்புணர்வு பேரணி சென்ற மாநகராட்சி கமிஷனரை, பொதுமக்கள் முற்றுகையிட்-டனர்.

ஓசூர் மாநகராட்சி, 31வது வார்டுக்கு உட்பட்ட காமராஜ் கால-னியில், மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு தினமும் பலர் நடைபயிற்சி மற்றும் இறகுபந்து, கால்பந்து, கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். இங்கு வந்து செல்வோருக்காக, ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே கழிவறைகள் கட்டப்பட்டு, 6 மாதமாகியும் திறக்கவில்லை. இது குறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், ஓசூர் மாநகராட்சி சார்பில், சுவஜ் பாரத் திட்-டத்தில், துாய்மையே சேவை என்பது குறித்த விழிப்புணர்வு பேர-ணியை, கமிஷனர் ஸ்ரீகாந்த் துவக்கி வைத்தார். பேரணி விளை-யாட்டு மைதானம் வழியாக சென்றபோது, மாநகராட்சி கமிஷ-னரை, கிருஷ்ணகிரி, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் முற்றுகையிட்ட மக்கள், போராட்டத்தில் ஈடுபட்-டனர். முன்னதாக அப்பகுதி, தி.மு.க., வார்டு கவுன்சிலர் மோசின் தாஜின் கணவர் நிஷார், டவுன் போலீசார், பேச்சுவார்த்-தையில் ஈடுபட்டபோதும், அதை அவர்கள் ஏற்கவில்லை.

இதையடுத்து முற்றுகையிட்டவர்களிடம், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த், விளையாட்டு மைதானத்திலுள்ள கழிவறை-களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us