/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நகராட்சிக்கு ஜன., 31க்குள் வரி செலுத்திஜப்தி நடவடிக்கை தவிர்க்க அறிவுறுத்தல்

ADDED : ஜன 10, 2025 01:34 AM
நகராட்சிக்கு ஜன., 31க்குள் வரி செலுத்திஜப்தி நடவடிக்கை தவிர்க்க அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி நகராட்சியில் நிலுவையிலுள்ள அனைத்து வரிகளையும் வரும் ஜன., 31க்குள் கட்ட வேண்டுமென, நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:2024- - 2025-ம் ஆண்டு முடிவடையும் தருவாயில் உள்ளதால், கிருஷ்ணகிரி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, வரியில்லா இணங்கள் (வாடகை நிலுவை) பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் மற்றும் தொழில் உரிம கட்டணம் ஆகியவைகளை நகராட்சி கணினி சேவை மையங்களில் வரும், 31க்குள் செலுத்த வேண்டும்.
சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளிலும் நகராட்சி கணினி மையங்கள் செயல்படும். கணினி மையங்களுக்கு வந்து, வரியை செலுத்த முடியாதவர்கள், https.tnurbanepay.tn.gov.in இணையதள முகவரி வழியாகவும், தங்கள் வரிகளை செலுத்தலாம். அவ்வாறு செலுத்த தவறினால், ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், குடிநீர் குழாய் இணைப்பும் துண்டிப்பு செய்யப்படும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.