முனீஸ்வர் நகர் சர்க்கிள் மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
முனீஸ்வர் நகர் சர்க்கிள் மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 13, 2026 03:12 AM
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இன்னர் ரிங்-ரோட்டில், முனீஸ்வர் நகர், வ.உ.சி., நகர், நியூ ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ ஆகிய பகுதிகள் சந்-திக்கும் இடத்தை, முனீஸ்வர் நகர் சர்க்கிள் என மக்கள் அழைத்து வந்தனர். ஓசூர் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அப்பகு-திக்கு, 'தந்தை பெரியார் சதுக்கம்' என பெயர்
மாற்றப்பட்டது.
இதற்கு ஹிந்து அமைப்புகள் மற்றும் குடியிருப்பு-வாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீண்டும் 'முனீஸ்வர் நகர் சர்க்கிள்' என பெயர் வைக்க வலியுறுத்தி, சட்ட போராட்டம் நடத்த, முனீஸ்வர் நகர் சர்க்கிள் மீட்பு குழு என, ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பு சார்பில், அதன் தலைவர் ராம-சாமி தலைமையில், 15 குடியிருப்பு நலச்சங்-கங்கள் ஆதரவுடன், ஓசூர் மாநகராட்சி அலுவ-லகம் முன், 'தந்தை பெரியார் சதுக்கம்' என்ற பெயரை மாற்றக்கோரி, நேற்று கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது.
