தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ யானைகள் உயிரிழப்பை தடுக்க தொடர் ஆய்வுக்கு உத்தரவு

யானைகள் உயிரிழப்பை தடுக்க தொடர் ஆய்வுக்கு உத்தரவு

யானைகள் உயிரிழப்பை தடுக்க தொடர் ஆய்வுக்கு உத்தரவு


ADDED : ஜூன் 13, 2026 03:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2026 03:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வனத்துறை சார்பில், ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பதைத் தடுக்கும் நடவடிக்கை மற்றும் அவிட்டுக்காய் பயன்பாட்டைத் தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:

மனித,- வனவிலங்கு மோதல்களை குறைக்க தடம் செயலி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. கடந்த, 2019 முதல், 2026 வரை மின்சாரம் தாக்கி, 7 யானைகள், துப்பாக்கிச் சூட்டால், 6 யானைகள், விபத்தால், ஒரு யானை மற்றும் இயற்கை கார-ணங்களால், 54 யானைகள் என, 68 யானைகள் உயிரிழந்துள்ளன. இவற்றை தடுக்க மின்கம்பிகள் மற்றும் மின் கம்-பங்கள் முறையாக உள்ளதா என அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்து, சட்ட விரோத மின்சார பயன்பாட்டைத் தடுக்க வேண்டும். அதேபோல அவுட்டுக்காய் வெடிகுண்டுகள் மற்றும் சட்டவி-ரோத ஆயுதங்களுக்கு எதிராக, வனத்துறையினர் மற்றும் துறை அலுவலர்களுடன் கூட்டு ரோந்து மேற்கொள்தல், விவசாயிகளுக்கு அங்கீகரிக்கப்-பட்ட சூரிய மின் வேலிகள் குறித்தும் விழிப்பு-ணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us