/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முத்துமாரியம்மன் கோவில் 34ம் ஆண்டு ஆடி உற்சவம்
/
முத்துமாரியம்மன் கோவில் 34ம் ஆண்டு ஆடி உற்சவம்
ADDED : ஆக 08, 2025 01:13 AM
ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் மாருதி நகரிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில், 34ம் ஆண்டு ஆடி உற்சவ விழா கடந்த, 30ம் தேதி துவங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, ஹோமம், அபிஷேக, அலங்காரம் நடந்தது. நேற்று காலை, 11:00 மணிக்கு, ராம்நகரிலிருந்து தாய் வீட்டு சீதனம் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு விசேஷ பூஜை நடந்தது.
தொடர்ந்து, தொழிலதிபர் மஞ்சுளா வரதராஜன் ஏற்பாட்டில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஓசூர் மாநகராட்சி, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், அன்னதானத்தை துவக்கி வைத்தார். மாலை, 4:30 மணிக்கு மாருதி நகர், சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி, கலைஞர் நகர், கிருஷ்ணா நகர், அண்ணாமலை நகர் வழியாக அம்மன் ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை, கோவில்
நிர்வாகிகள் செய்துள்ளனர்.

