/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
/
முத்துமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
ADDED : செப் 17, 2024 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பாரதியார் நகரிலுள்ள முத்துமாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு நேற்று மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம், கணபதி பூஜை, யாகசாலை அமைத்து புனித நீர் அடங்கிய கலசங்களை வைத்து சிறப்பு ஆராதனை நடந்தது.
நேற்று காலை, முத்துமாரியம்மன் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்ட கோபுர கலசத்தின் மீது, புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

