ADDED : செப் 04, 2024 09:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அடுத்த மருதேரி, காவாப்பட்-டியை சேர்ந்தவர் வசந்தா, 50; இவர் அதே பகு-தியில் உள்ள சரவணன் என்பவரின் தேங்காய் மண்டியில் கொப்பரை தேங்காய் சேகரிக்கும் பணி செய்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை, 4:00 மணிக்கு வழக்-கம்போல உடல் உபாதையை கழிக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. அவர் மகன் கவுதம், 23, தாயை தேடினார். தென்பெண்ணை ஆறு நெடுங்கல் தடுப்பணை வாய்க்காலில் சறுக்கி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்படி நாகர-சம்பட்டி போலீசார், போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர் தேடி வந்தனர். நேற்று காலை, வசந்தாவின் உறவினர்கள் வாய்க்காலில் தேடியபோது, விளங்காமுடி அமட்டன்குட்டை பகுதி முட்புதரில் சடலமாக கிடந்த வசந்தாவின் உடலை மீட்டனர். நாகரசம்-பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.