/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
2 குடிசை வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
/
2 குடிசை வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
ADDED : செப் 07, 2025 12:49 AM
சூளகிரி, சூளகிரி அருகே, இரு குடிசை வீடுகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், காமன்தொட்டி பஞ்.,க்கு உட்பட்ட தட்சிண திருப்பதி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், கூலித்தொழிலாளர்கள் சக்திவேல், 27, சாம்ராஜ், 50, ஆகியோர், குடியிருக்க புதிதாக குடிசை போட்டுள்ளனர். வீட்டு பொருட்களை அதற்குள் வைத்து விட்டு, அருகில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை, ஆறு பேர் குடிசை போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த மா.கம்யூ., கட்சி மலைவாழ் சங்க மாவட்ட குழு உறுப்பினர் கலாவதி பிரபுவிடம் தகராறு செய்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு மேல், இரு குடிசை வீடுகள் மீதும் பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் தீ வைத்தனர். வீடுகளில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. வீடுகளில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த மா.கம்யூ., கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகேஷ் மற்றும் நிர்வாகிகள், நேரில் சென்று சக்திவேல், சாம்ராஜ் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.