/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மர்ம பொருள் வெடித்து வாலிபர் கால்முறிவு
/
மர்ம பொருள் வெடித்து வாலிபர் கால்முறிவு
ADDED : ஏப் 27, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரியை சேர்ந்தவர் கார்த்திக், 29, விவசாயி.
இவர் நேற்று முன்தினம், அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம பொருள் வெடித்தது. இதில், அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவரை உறவினர்கள் மீட்டு, பெங்களூரு மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

