/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண் தற்கொலையில் மர்மம்: கணவரை கைது செய்த போலீசார்
/
பெண் தற்கொலையில் மர்மம்: கணவரை கைது செய்த போலீசார்
பெண் தற்கொலையில் மர்மம்: கணவரை கைது செய்த போலீசார்
பெண் தற்கொலையில் மர்மம்: கணவரை கைது செய்த போலீசார்
ADDED : டிச 10, 2024 01:24 AM
கிருஷ்ணகிரி, டிச. 10-
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த ஆம்
பள்ளியை சேர்ந்தவர் அன்பழகன், 45. கூலித்தொழிலாளி. இவர் மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு இரு மகன்கள். அன்
பழகன், கடந்த, 2014ல் ஆம்பள்ளியை சேர்ந்த ரூபினி, 32 என்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததில், அவர் கர்ப்பமானார்.
அப்பகுதி ஊர் பெரியவர்கள் பேசி, அன்பழகனுக்கு ரூபினியை, 2ம் திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு, 9 வயதில் ஒரு மகன் உள்ளார். கண்பார்வை சற்று குறைவாக உள்ள ரூபினி, நேற்று முன்தினம், மர்மமான முறையில் வீட்டில் துாக்கில் சடலமாக தொங்கினார்.
இதை கொலை வழக்காக பதிவு செய்ய, ரூபினியின் உறவினர்கள் கூறிய நிலையில், மத்துார் போலீசார், தற்கொலை வழக்காக பதிவு செய்தனர்.
ரூபினியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, ரூபினியின் தம்பி நம்பிராஜன், தந்தை நாகராஜ் மற்றும் உறவினர்கள், 20க்கும் மேற்பட்டோர் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயுவிடம் மனு அளித்தனர்.
பின், நிருபர்களிடம் அவர்கள் கூறுகையில், 'ரூபினியை, அன்பழகனும் அவரது குடும்பத்தாரும் தினமும் அடித்து துன்புறுத்தி வந்தனர். நேற்று முன்தினம் அவர் துாக்கில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கண்பார்வை குறைபாடுள்ள அவரால் எப்படி துாக்கில் தொங்க முடியும்.
எனவே தற்கொலை வழக்கை, கொலை வழக்காக மாற்றி, சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம்' என்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை ரூபினியின் கணவர் அன்பழகனை, சந்தேகத்தின் அடிப்படையில் மத்துார் போலீசார் கைது செய்துள்ளனர்.