/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் நல்லம்பள்ளி விவசாயிகள் வேதனை
/
மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் நல்லம்பள்ளி விவசாயிகள் வேதனை
மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் நல்லம்பள்ளி விவசாயிகள் வேதனை
மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் நல்லம்பள்ளி விவசாயிகள் வேதனை
ADDED : அக் 11, 2025 12:31 AM
நல்லம்பள்ளி, அநல்லம்பள்ளி அருகே, நேற்று முன்தினம் இரவு பெய்த கன
மழையால், நெற் பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வடகிழக்கு அரபி கடலில் ஏற்பட்டுள்ள புயலின் காரணமாக, தர்மபுரி உட்பட, 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு நல்லம்பள்ளி, தொப்பூர், தர்மபுரி, இண்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில், 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதன் காரணமாக, நீரோடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், விவசாய நிலங்களிலும் மழைநீர் தேங்கி நின்றது.
இதில், நல்லம்பள்ளி ஒன்றியம், மாதேமங்கலம் பஞ்.,க்குட்பட்ட சவுளுக்கொட்டாய் கிராமத்தில் நீரோடைகள் ஆக்கிரமிப்பின் காரணமாக, மழைநீர் வெளியேற வழி இல்லாமல், 20 ஏக்கர் பரப்பில் இருந்த நெல், கம்பு, சோளம், தீவனப்பயிர், தக்காளி, கத்தரி உள்ளிட்டவை நீரில் மூழ்கின.
நீரோடைகள் ஆக்கிரமிப்பு குறித்து, மாவட்ட நிர்வாகத்தில் அப்பகுதி மக்கள் கடந்த ஆண்டு புகார் அளித்திருந்த நிலையில், துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்காததால், தற்போது விவசாய பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும், வடகிழக்கு பருவமழை தீவிரமடையவுள்ள நிலையில், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.